
சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும், அதைக் கட்டிய மாமன்னன் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். அடிமனதிலிருந்து காதல் பொங்கும். சோழநாட்டில் பிறந்தவர்களுக்கே என்றில்லை, யாரெல்லாம் சரித்திரத்தின் ரசிகர்களோ அவர்களுக்கெல்லாம் பிரமிப்பு ஊட்டக்கூடிய விஷயம்தான் ஸ்ரீ ராஜராஜ தேவரின் சாதனை. எங்கள் ஐயன் சேனாபதி மும்முடிச்சோழ பிரம்மராயர் கிருஷ்ணன் ராமன் நினைவாகவும், உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவரின் புகழ் சொல்லும்படியாகவும் இந்தப் படைப்பு இருக்கும். இந்த நாவல் பற்றி புரிந்துகொள்ளாமல் ஏன் உடையார் என்று எழுதினீர்கள். அது ஒரு ஜாதியின் பெயரல்லவா என்று கேட்ட பேராசிரியரும் உண்டு. அதிகாரிச்சி என்ற தமிழ் வார்த்தை தவறு என்று சொன்னவரும் உண்டு. அதிகாரிச்சி என்ற வார்த்தை சோழ தேசத்தில் அன்று புழங்கிய வார்த்தை. அதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இந்தப் புதினம் படித்துவிட்டு ஏதும் தோன்றினால் எனக்கு தயவுசெய்து எழுதுங்கள். வாசகரும், எழுத்தாளரும் அபிப்ராயங்கள் பரிமாறிக்கொள்வது இலக்கியத்திற்கு நல்லது
| Best Sellers Rank | #1,750,801 in Kindle Store ( See Top 100 in Kindle Store ) #1,851 in Tamil eBooks #60,125 in Historical Fiction (Kindle Store) #106,807 in Historical Fiction (Books) |
Trustpilot
4 days ago
2 weeks ago
4 days ago
1 month ago